Asianet News TamilAsianet News Tamil

டெங்குவை தடுக்க அரசுப் பள்ளிகளில் 1400 மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது…

gave nilavembu kasayam for 1400 students in government schools to prevent dengue
gave nilavembu kasayam for 1400 students in government schools to prevent dengue
Author
First Published Aug 3, 2017, 8:34 AM IST


பெரம்பலூர்

பெரம்பலூரில் டெங்குவை தடுக்க பொது சுகாதார துறை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1400 மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ளது கீழப்பெரம்பலூர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமிற்கு குன்னம் சித்த மருத்துவர் அன்பழகன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், பிரபு ஆகியோர் கொண்ட குழு டெங்கு காய்ச்சல் முன்தடுப்பு பணிகள், ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த முகாமில், பள்ளி மாணவ, மாணவிகள் 600 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதில், டெங்கு காய்ச்சல், கொசு உற்பத்தியாகும் இடங்கள், அவைகளை அழித்தல் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோல் துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி தலைமை வகித்தார்.

குன்னம் சித்த மருத்துவர் அன்பழகன், துங்கபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அனிதா ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கமளித்து பேசினர்.

பின்னர், பள்ளி மாணவர்கள் 800 பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios