சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக ரூ. 6 . 52 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது, இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீப காலங்களாக எண்ணெய் நிறுவங்கள் தொடர்ந்து, டீசல், பெட்ரோல், மற்றும் சமையல் எரிவாயு விலைகளை அதிகரித்து கொண்டே சென்றது.

கடந்த மாதம் கூட மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ. 59 உயர்ந்தது. அதுபோல் மானியம் உள்ள சிலிண்டர்களின் விலையை ரூ. 2.89  காசுகள் உயர்த்தப்பட்டது. 

இப்படி திடீர் திடீர் என உயர்த்தப்பட்டு வந்த சிலிண்டரின் விலை, தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று சமையில்  எரிவாயு சிலிண்டரின்  விலை அதிரடியாக குறைந்து உள்ளது.
 
மானியம் உள்ள சமையில்  எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 6 .52 காசுகளும், மானியம் இல்லாத சிலிண்டரின் விலை ரூ. 133 குறைந்துள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ளதால், எரிவாயு சிலிண்டரின் விலையை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. தொடர்ந்து 6 மாதங்களாக உயர்ந்து வந்த எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது குறைந்துள்ளது மகளிரை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.