Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சதுர்த்தி 2022 : இவற்றுக்கெல்லாம் தடை தெரியுமா ?

ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

Ganesha Chaturthi guidelines for immersion of idols released
Author
First Published Aug 20, 2022, 9:44 PM IST

அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகர் அவதரித்த திதி அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.  தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தாற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன.

Ganesha Chaturthi guidelines for immersion of idols released

பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஊர்வலம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சிலைகள் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..முதல்வரை சந்தித்தது எம்.பி பதவிக்கு தானா ? ஓ.பி ரவீந்திரநாத் சொன்ன அதிர்ச்சி தகவல் !

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை நீர் நிலையில் கரைக்க கூடாது. பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி) , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது.

Ganesha Chaturthi guidelines for immersion of idols released

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளுக்கு ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் மோடி தான் முதலிடம் ! மற்ற பிரதமர்களுக்கு இடமே கிடையாது தெரியுமா !” வெளியான அதிர்ச்சி தகவல் !

Follow Us:
Download App:
  • android
  • ios