From January 21 onwards will be downloaded from coconut trees -

நீலகிரி

வருகிற ஜனவரி 21-ஆம் தேதி முதல் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், "தமிழகத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டு கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கள்ளில் கலப்படம் செய்ததாகவும், கள் குடித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதாக கூறியும் அரசு, கள்ளுக்குத் தடை விதித்தது.

ஆனால், தற்போது வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கள் இயக்க ஆதரவாளர்கள், அவரவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து அவரவர் பயன்பாட்டிற்குத் தேவையான கள் இறக்கிக் குடித்துக் கொள்வார்கள்.

இதன் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சட்டப்படி சந்திப்போம்" என்று அதில் தெரிவித்துள்ளார்.