free wifi in government schools

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இனி மாணவர்களுக்கு இலவசமாக வைஃபை வசதி செய்து தரப்படும் என்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தமிழக சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய வேடசந்தூர் தொகுதி அதிமுக உறுப்பினர் பரமசிவன், தமிழக கல்வித் துறையில் செங்கோட்டையன் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மேல் நிலைப்பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிக்கூடங்களில் இலவசமாக வைஃபை செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்யைன், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இனி மாணவர்களுக்கு இலவசமாக வைஃபை வசதி செய்து தரப்படும் என்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.