free foood service started in the name of fridge in thoothukudi

அட்சயபாத்திரம் துவக்கம்...பசி எடுத்தால்பிடித்ததை எடுத்து சாப்பிடுங்க...காசு வாங்க மாட்டாங்க.....

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்கள் என பலவற்றிலும் மக்கள் பிரித்து இனங்கான முடியும். ஆனால் பசி எடுக்கும் போது இருக்கப்பட்டவங்க...இல்லாதவங்க...என்ற பாகுபாடு பார்க்க முடியுமா என்ன?

எல்லோருக்கும் வயறு இருக்கு....அதற்கு தேவையானதை சரியான இடைவெளியில் ஏதாவது எடுத்துக் கொண்டால் தானே உயிர் வாழ முடியும்.....

இந்த உலகில் பல கொடுமைகள் நடந்தாலும், பசியால் பாதிக்கப்படும் கொடுமை வேறு எந்த கொடுமைக்கும் ஈடு செய்து கூட பேச முடியாது.....

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினார்...கள்வருக்கும் இரக்கம் காட்டினார் வள்ளலார் என்பது நாம் அறிந்த ஒன்றே ...

அதனை பிரதிபலிக்கும் விதமாக தூத்துக்குடியில் அட்சயப்பாத்திரம் என்ற பெயரில் பிரிட்ஜ் வைக்கப்பட்டு தேவைப்படுவோர் உணவை எடுத்துச் சென்று பசியாறுவதற்கு, தூத்துக்குடி ஆணையர் அல்பே ஜான் வர்கீஸ் ஏற்பாடு செய்து உள்ளார்.

இவரின் இந்த அற்புத திட்டத்தை அறிந்த மக்கள் ஆணையரை வயிறார வாழ்த்தி செல்கின்றனர். இந்த திட்டத்திற்கும் மக்கள் பெரிதளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர் 
தூத்துக்குடி மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள இந்த பிரிட்ஜ்ஜை ஒரு சூப்பர் மார்கெட் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அதாவது தங்களால் இயன்ற அளவிற்கு நல்ல தரமான உணவை இந்த பிரிட்ஜில் வைத்து செல்கின்றனர்.

அதே வேளையில் பசியால் வாடுவோர் ஒருபுறம் அந்த உணவை எடுத்து சென்று உண்கின்றனர்.இந்த திட்டம் மக்களிடேயே நல்ல வவேற்பை பெற்றுள்ள நிலையில்,மேலும் பல இடங்களில் இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது