free education for transgenders
திருநங்கைகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும் எனவும், கல்வியில் சிறந்த திருநங்கைகளுக்கு 3 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூடியது. பின்னர், கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விவாதம் நடைபெறவில்லை. இதனால், எதிர்க்கட்சியினர் பட்ஜெட் குறித் விவாதங்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 14ம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்றம் கூடியது. இரண்டாவது நாளான இன்று பல்வேறு மானிய கோரிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு தமிழக அரசு பதிலளித்து வருகிறது.
இதனிடையே சர்ச்சையை கிளப்பிய அதிமுக எம்.எல்.ஏ சரவணன் வீடியோ குறித்து பேச சபாநாயகர் அனுமதி அளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், திருநங்கைகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும் எனவும், கல்வியில் சிறந்த திருநங்கைகளுக்கு 3 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சட்டசபையில் தகவல் தெரிவித்துள்ளார்.
