நகை, பணத்துக்காக 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு கள்ளக்காதலியின் மகளையும் கல்யாணம் பண்ணி மோசடி செய்த கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.

புழல் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆடலரசு. இவர் தனியார்  பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஆறு மாதத்துக்கு முன்புதான் தனியார் நிதி நிறுவனம் மூலம் புதிக வாடகைக்கு கார்  ஓட்டுவதற்காக கார் வாங்கினார். விடுமுறை நாட்களில் சவாரி கிடைக்காததால் சென்னை ராயப்பேட்டை, அம்மையப்பன் தெருவை சேர்ந்த நிர்மல் மகேஷ், அவரது மனைவி அனிதா  ஆடலரசுக்கு தொடர்பு  கொண்டு தனியார் நிதி  நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய மாதத்தவணை 20 ஆயிரத்தை தாங்களே கட்டி விடுவதாகவும், ஒப்புக்கொண்டு காரை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஆடலரசுக்கு  ஒருபோன் வந்தது. அதில் இரண்டு மாதமாக மாதத்தவணை செலுத்தவில்லை.  உடனே வந்து கட்டும்படி கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆடலரசு, நிர்மலின் செல்போனை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டிருந்தது. அவர் கொடுத்த முகவரி போலி என்பதும் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த ஆடலரசு, போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர், வழக்குப்பதிவு செய்து  நிர்மலிடம் தொலைபேசியில் பேசியபோது, தான் ஒரு ஐகோர்ட் வக்கீலாக இருப்பதாகவும், அமைச்சரின் பி.ஏ.வாக இருப்பதாகவும் தன்னால் வரமுடியாது  என மிரட்டியிருக்கிறார்.

இந்நிலையில், தனிப்படை  அமைத்து நிர்மலின் செல்போனை வைத்து விசாரணை தொடங்கியதில் பாண்டிச்சேரி லெனின் தெருவில் உள்ள ஒரு வீட்டில்  இருப்பதை கண்டுபிடித்து அவனையும் அவனது மனைவி அனிதாவையும் கைது செய்த போலீசார் விசாரித்ததில், நிர்மல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுராந்தகத்தை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணை நிர்மல் முதல்  திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனைவியிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடிவிட்டு. பின்னர்  செங்குன்றம் அடுத்த பாலவாயல் என்ற கிராமத்தில் கஸ்தூரி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளான். அந்த பெண்ணிடம் இருந்த நகைகளை  எடுத்துக் கொண்டு  அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் என்ற இடத்திற்கு வந்த இவருக்கு சரளா என்ற பெண்ணிடம் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இந்த  கள்ளத் தொடர்பால் சரளாவின் மகள் அனிதாவை 2013ம் ஆண்டு மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். மேலும் வங்கியில் நிலத்தின்பேரில் லோன் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் சுமார் ஒருகோடி அளவிற்கு மோசடி செய்துள்ளது அம்பலமானது. இதனையடுத்து போலீசார் கணவன் - மனைவி இருவரையும் கைது பொன்னேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.