கடந்த திங்கள்கிழமை கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜனகாவை செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர், "கன்னியாகுமரியில்  இருக்கும் இருளப்பபுரம் என்னும் பகுதியில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகிறார். அச்சிறுமியின்  உறவினரே இத்தைகைய இழி செயலில் ஈடுபடுகிறார்" என்று தகவல் கொடுத்தார்.

தொடர்புடைய படம்

இதனைக் கேட்ட பியூலா பெல் ஜனகா, இந்தத் தகவல் உண்மைதானா? என்று விசாரிக்க இருளப்பபுரம் சென்றார். அங்கு போனில் வந்த தகவலின்படியே நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது. அச்சிறுமியின் தாத்தா தான் இந்த செயலில் பல நாள்களாக ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிந்தது.

child abuse க்கான பட முடிவு

பின்னர் சம்பவ இடத்திற்கு நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி, தலைமைக் காவலர் ஜெமீலா ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் கொடுத்த புகாரின்பேரில் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா பால்ராஜ் (52) என்பவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

arrest க்கான பட முடிவு

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், "பெற்றோர் பிரிந்துவிட்டதால் சிறுமியை அவரது உறவுப் பெண் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் சிறுமியின் தாத்தா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரிந்தது. சிறுமியை மீட்ட காவலாளர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நான்கு வயது பேத்தி, தனது தாத்தாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.