Four women were admitted to Puducherrys Jipmer Hospital.

மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பெண்கள் இடிதாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பெண்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை சீசனில் நல்ல மழை பெய்தது.

இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தென்மேற்கு பருவமழை காலம் நேற்றுடன் நிறைவடைந்து, வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கியது. 

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

தமிழகம், புதுச்சேரியில் இன்று வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பெண்கள் இடிதாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பெண்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.