முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விஸ்வநாதன்  அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் காரை வீட்டுக்குள் நிறுத்துப்போது கதவிடுக்கில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் . ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி விஸ்வநாதன் . இவர் முன்னாள் முதலமைச்சரும்  தி.மு.க., தலைவருமான கருணாநிதியிடம் தனி செயலாளராக பணி புரிந்துள்ளார். ஓய்வு பெற்ற பின்னர் அண்ணாநகரில்  உள்ள பொன்னி தெருவில் வசித்து வந்தார்.

இன்று மாலை தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை வீட்டின் உள்ளே எடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கார் எதிர்பாராதவிதமாக பின்னோக்கி வேகமாக சென்றது.

இதில் காருக்கும் காரின் கதவுக்கும் இடையில் சிக்கிய விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். தலையில் காயத்துடன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஸ்வநாதன் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.