former dinamalar photographer anand suicide in madurai

மதுரையில் பத்திரிக்கை போட்டோகிராபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரையைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகப் பணியாற்றியவர். கடைசியாக தினமலர் பத்திரிகையில் புகைப்பட நிருபராகப் பணியாற்றி நான்கு மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்து நின்றுவிட்டார். இவர் இன்று மதியம், மதுரை ஐராவதநல்லூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

குடும்பத்தகராறில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இவருக்கு ஒரு மகள் உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருடைய 10 வயது மகன் ஒருவர் புற்றுநோயால் மரணம் அடைந்தார். அந்த வருத்தத்தில் இருந்த ஆனந்த், இன்று தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.