ADMK : நீலகிரி தொகுதி முன்னாள் அதிமுக எம்பி திடீர் மரணம்.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

நீலகிரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி கோபாலகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக காலமானர். அவரது மறைவிற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Former AIADMK MP Gopalakrishnan passed away due to heart attack KAK

அதிமுக மாஜி எம்பி மரணம்

கோவையை அடுத்த குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவர் நீலகிரி தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரசியலில் பெரிய அளவில் ஈடுபடாமல் அமைதி காத்து வந்தார்.

இவர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு உறவினர் வீட்டு பிரச்சனையால் வழக்கு ஒன்றில் சிக்கிக்கொண்டார். இதன்  காரணமாக அதிமுகவில் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Former AIADMK MP Gopalakrishnan passed away due to heart attack KAK

இபிஎஸ் இரங்கல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீலகிரி மாவட்டக் கழக முன்னாள் அவைத் தலைவரும், நீலகிரி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், குன்னூர் நகர மன்ற முன்னாள் தலைவருமான டாக்டர் C. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios