இராமேசுவரம்,
இராமேசுவரத்தில், கோவாவில் இருந்து சென்னை செல்வதற்காக வந்த இழுவைக் கப்பல் பாம்பன் பாலத்தை கடக்க அனுமதி கேட்டு மூன்று நாள்களாக காத்திருக்கிறது.
கோவாவில் இருந்து சென்னை செல்வதற்காக ஒரு இழுவைக் கப்பல் கடந்த 3 நாள்களுக்கு முன்பு இராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் பகுதிக்கு வந்துச் சேர்ந்தது.
பாம்பன் இரயில்வே தூக்குப் பாலத்தை கடந்து செல்வதற்கு துறைமுக அதிகாரிகளின் அனுமதி வேண்டும். இதற்காக அந்த இழுவை கப்பல் பாம்பன் குருசடை தீவு கடல் பகுதியில் கடந்த 3 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பாம்பன் இரயில்வே பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தில் இரயில்வே நிர்வாகம் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பணிகள் முடிந்த பின்பே தூக்குப்பாலம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் அந்தக் கப்பல் பாதுகாப்பாக நங்கூரமிட்டு பாம்பன் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
