எஸ்.பி.ஐ. வங்கியில், கனிஷ்க் ஜுவல்லரி ரூ.824 கோடி கடன் பெற்று மோசடி செய்த நிலையில், நாதெள்ளா சம்பத் ஜுவல்லரி ரூ.250 கோடி மோசடி செய்திருப்பது வெளியாகி
உள்ளது. 

சென்னையில் இயங்கும் கனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடை மீது ரூ.824.15 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது
எஸ்.பி.ஐ. வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, சி.பி.ஐ.யில் புகார் அளித்துள்ளது. கனிஷ்க் ஜூல்லரி நகைக்கடை மீது 16 பக்க குற்றச்சாட்டுகளை சிபிஐயிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் புபேஷ் குமார், அவரது மனைவி நீதா ஜெயின் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மற்றொரு தனியார் நகைக் கடையான நாதெள்ளா சம்பத் நகைக் கடை ரூ250 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக சிபிஐயிடம் எஸ்பிஐ வங்கி புகார் கொடுத்துள்ளது.

நாதெள்ளா சம்பத் நகைக்கடை, தனது நிதிநிலையை போலியாகக் கணக்குக்காட்டி, சில சொத்துக்களை அடிப்படையாக வைத்து கடன் பெற்று ஏமாற்றியதாக எஸ்பிஐ
கூறியுள்ளது.

நாதெள்ளா சம்பத்து செட்டி நகைக்கடை, பொதுமக்களிடம் இருந்து  தங்க நகை சேமிப்பு திட்டத்தின்கீட்ழ முதலீடுகளைப் பெற்று, அதனைத் திருப்பித் தராமல் மோசடி
செய்தது. இதையடுத்து, சென்னையில் இருந்த நகைக்கடை மூடப்பட்டது.

கனிஷ்க் ஜூவல்லரி, நாதெள்ளா சம்பத் ஜுவல்லரி உள்ளிட்ட நிறுவனங்களிடம் எஸ்.பி.ஐ. வங்கி கடன் கொடுத்து ஏமாந்து உள்ளது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை
எழுப்பியுள்ளது.