கர்நாடகாவிலல் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரவதால் கபினி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர், ஒகேனக்கலில் ஆப்பரித்துக் கொட்டுகிறது. தற்போது அங்கு 21 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததையடுத்து கபினி அணை கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து அங்கிருந்து 35000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ஆனால் திடீரென அங்கு மழை பெய்வது நின்றுவிட்டதால், கபின் அணையிலிருந்து தறந்துவிடப்டம் தண்ணிரின் அளவு வெறும் 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்  தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் கபினியில் இருந்து 26000 கனஅடி தண்ணிர் திறந்துவிடடப்பட்டது. அந்த தண்ணீர் தற்போது ஒகேனக்கல் வந்து சேர்ந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 600 கன அடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, 21 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, பரிசல் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில்மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.