Asianet News TamilAsianet News Tamil

குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுகள் பெற்ற 5 தமிழர்கள்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உள்பட 106 பேருக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

Five people from Tamilnadu received Padma Awards from President Droupadi Murmu
Author
First Published Mar 22, 2023, 8:38 PM IST

2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்று வருகிறது. இதில் 19 பெண்கள் உள்பட 106 பேருக்கு பத்மஶ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.

இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரும் பத்ம விருதுகளைப் பெற்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் கே. கல்யாணசுந்தரம் பிள்ளை, செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், நெல்லையைச் சேர்ந்த நூலகரும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரம், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி  ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளாடும் தமிழகம் - ஆழ்ந்த உறக்கத்தில் ஆட்சியாளர்கள்: அண்ணாமலையின் பட்ஜெட் அலசல்

பரதக் கலைஞர் கல்யாணசுந்தரம் கலைமாமணி, 6 வயதிலேயே கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர் கோயிலில் அரங்கேற்றம் செய்தவர். நாட்டிய செல்வம் போன்ற பல விருதுகள் பெற்றவர். தந்தை குப்பையா பிள்ளை, சகோதரர் டி.கே.மகாலிங்கம் பிள்ளை உள்பட இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தஞ்சாவூர் பாணி பரத நாட்டியத்தை பரப்பியவர்கள்.

இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புபிடி தொழிலில் ஈடுபட்டுவரும் வல்லுநர்கள். அபாயகரமான விஷப் பாம்புகளை பிடிப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களது திறமைக்காக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் அழைக்கப்பட்டவர்கள்.

நான் முழுசா உடைஞ்சு போயிருக்கேன்: ஆதன் மாதேஷின் தன்னிலை விளக்கம்

நெல்லையில் பிறந்த பாலம் கல்யாணசுந்தரம் நூலகராகவும் சமூக சேவகராகவும் செயல்பட்டு பங்களிப்பாற்றியவர். ‘பாலம்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி 30 ஆண்டுகளாக நடத்திவருகிறார். சித்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு விருதுநகர் மாவட்டம் பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் படித்த இவர் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்.

இந்த ஐவர் தவிர பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்த பின்னணிப் பாடகர் வாணி ஜெயராம் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி காலமானர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

நேர்மைக்கு கிடைத்த பரிசு! ரயில்வே கூலித் தொழிலாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு!

Follow Us:
Download App:
  • android
  • ios