Five lorries taken by sand in Pudukottai

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தின் கண்மாய்களில் அனுமதியின்றி மணல் எடுத்துவந்த ஐந்து லாரிகள் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கண்மாய்களில் அனுமதியின்றி லாரிகளில் மணல் எடுக்கப்படுவதாக காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில் புதுக்கோட்டையின் கண்மாய்களிலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவலாளர்கள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மாத்துார் மற்றும் மித்ராவயல் பகுதியில் சோதனையில் இருந்தபோது மணல் ஏற்றி வந்த லாரிகளை சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் அவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளிவந்ததும், அதனை சிவகங்கை மாவட்டத்தில் விற்பதற்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.

பின்னர், மணல் கடத்த பயன்படுத்திய ஐந்து லாரிகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.