fishermen arrested by srilankan navy
ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று கடலில் மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே நடக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ஜஸ்டின் என்பவரது படகு பழுதானது.
இதையடுத்து மீனவர்கள், பழுதான படகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

கடந்த 6ம் தேதி இதேபோல் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில், பிரிட்ஜோ என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மீண்டும் இலங்கை படையினர், நடுக்கடலில் மீனவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
