Fireworks and match stick workers train block protest on january 18th

விருதுநகர்

விருதுநகரில், வரும் 18-ஆம் தேதி இரயில் மறியல் செய்ய பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பட்டாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும், மத்திய சுற்றுச் சூழல் துறையில் பட்டாசுக்கு என தனியாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் டிசம்பர் 26–ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடியுள்ளனர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தைத் தொடங்கிவைத்து மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினார். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தேவா சிறப்புரை ஆற்றினார்.

இந்தக் கூட்டத்தில் பட்டாசு தொழில் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் 18-ஆம் தேதி திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் இரயில் மறியல் போராட்டம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பி.பாண்டி, பிச்சைக்கனி, ஆர். பாண்டி ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.