fire accident in chennai nungambakkam income tax office

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் 4 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிகள் தீயில் எரிந்து நாசமாகின.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 3 கட்டடங்களை கொண்ட வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு கட்டடத்தின் 4 வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதை பார்த்த அலுவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து 3 வண்டிகளில் எழும்பூர், கீழ்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருகின்றனர்.

தீயணைப்பு வீர்ர்கள் வருவதற்குள் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின.

மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் அடுத்தடுத்து முக்கிய இடங்களில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்படுவது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.