Asianet News TamilAsianet News Tamil

உயிரிழந்த சி.ஆர்.பி.எப். தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

financial assistance to tamil nadu CRPF soldiers family
financial assistance-to-tamil-nadu-crpf-soldiers-family
Author
First Published Apr 25, 2017, 1:53 PM IST


சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளால் உயிரிழந்த தமிழக சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல் தாக்குதலுக்கு  ஆளாகி உயிரிழிந்தவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், சேலம் திருமுருகன், தஞ்சை பத்மநாபன், அழகுபாண்டி ஆகியோர் உயிரிழந்தனர்.

நகசல் தாக்குதலில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25 சிஆர்பிஎப் வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்தனர். சுக்மா மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த 4 வருடங்களில் இது 10வது நக்சலைட் தாக்குதலாகும்

தமிழகத்தை சேர்ந்த சத்தீஷ்கர் மாநில ஐஏஏஸ்  அதிகாரியான அலெக்ஸ்பால் மேனனும், இதே சுக்மா மாவட்டத்தில்தான் கடத்தி வைக்கப்பட்டு, நீண்ட நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.

சுக்மா மாவட்டத்தில் தொடர்ந்து நக்சலைட் தாக்குதல் நடைபெற்று வருவதால், தமிழக்ததில் இருந்து அப்பகுதியில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர் அச்சமும் கலக்கமும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நக்சல் தாக்குதலில் உயிரிழந்த 4 துணை ராணுவ தமிழக வீரர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்ததோடு, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

உயிரிழந்த 4 வீரர்கள் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios