பிடல் காஸ்ட்ரோவின் மறைவையொட்டி, மணப்பாறையில் காமராஜர் சிலை தொடங்கி, தந்தை பெரியார் சிலை வரை பிடல் காஸ்ட்ரோவுக்கு அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மணப்பாறையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் அமைதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தந்தை பெரியார் சிலையை அடைந்தது. அங்கு பிடல் காஸ்ட்ரோவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலரும் பேசினர்.

இந்த அமைதி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க, தே.மு.தி.க., திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா மற்றும் மணவைத் தமிழ்மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.