Female vomit

பல்லி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட பெண் ஒருவர் மயக்கம் வாந்தி எடுத்தார். இதைடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகமும் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 

மருத்துவமனை வளாகத்தில், அம்மா உணவகம் இயங்கி வரும் நிலையில், அங்கு வரும் நோயாளிகள் அம்மா உணவகத்தை பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், மணாளக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த ஏஞ்சல் என்பவர், தனது தாயார் அமலாவை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

காலை உணவு சாப்பிடடுவதற்காக ஏஞ்சல், அம்மா உணவகம் சென்றுள்ளார். ஏஞ்சல் இட்லி வாங்கி சாப்பிட்டார். அப்போது சாம்பாரில் சிறிய பல்லி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏஞ்சல் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். இதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த ஏஞ்சலின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். அம்மா உணவகம் வந்த மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் சுகாதார துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உணவகத்தில் சமையல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மா உணவக சிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.