போலீஸ் சீருடையில் மது அருந்திய பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாட்ஸ் அப் வீடியோ ஒன்று தமிழகத்தில் வைரலாக பரவி வருகிறது. பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் சீருடையில் இருந்து கொண்டே மது அருந்தும் காட்சிதான் அது. கார் சீட்டில் சாய்ந்து படுத்திருக்கும் அந்த பெண்ணை, அவருடன் இருக்கும் ஆண் ஒருவர் டார்ச் லைட் வெளிச்சத்தில் வீடியோ எடுத்துள்ளார். 

அப்போது, அந்த பெண் போலீசிடம், அவரது ஆண் நண்பர் பேசும் பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. சரக்கெடுத்து காட்டுடீ... ஏட்டம்மா போதையாயிட்டா... நல்லா பாத்துக்குங்க... ஃபுல் அடிச்சுட்டா... காட்டுடீ கண்ண காட்டுடீ... என அந்த ஆண் பேசுகிறார். காரில் சாய்ந்து கிடக்கும் அந்த பெண்
போலீசை பார்த்து அவர் பேசுவதாக உள்ளது. மேலும், வீடியோ எடுக்கும் நபர், பெண் போலீசின் உறுப்புகளை எல்லாம் படம் பிடிக்கிறார். 

அதனை தடுக்கும் நிலையில் அந்த பெண் இல்லை. வீடியோ எடுப்பவர் புத்திசாலித்தனமாக தன் முகத்தை காட்டிக் கொள்ளவில்லை. டம்பளரில் இருக்கும் மதுவை குடிப்பதும், வாடா போடா என்று அந்த பெண் போலீஸ் பேசுவதும், வாடி போடீ என்று ஆண் பேசுவதும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ
வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. 

பணியில் இருக்கும் நேரத்தில் காவல் வாகனத்தில் சீருடையுடன் மது அருந்துவதும், அவருடைய ஆண் நண்பர் இவரை படம் பிடிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சீருடையில் மது அருந்தும் பெண் போலீஸ் ஜெய்னுப் நிஷா என்பது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுக்கா, சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் என்று கூறப்படுகிறது. அவரை எஸ்.பி. சக்திவேல் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் சீருடை
அணிந்து சக நண்பர்களுடன் மது அருந்தியது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து எஸ்.பி. சக்திவேல் நடவடிக்கை எடுத்துள