சென்னையில் பெண் மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரி, சூளை ரூபிகோல்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுதாமல்லிகா. இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருதயம் தொடர்பான மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார்.

இவரது கணவர் சதீஷ்குமார். இவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை மருத்துவராக பணி புரிகிறார்.

இந்நிலையில், கணவர் சதீஷ்குமார், வழக்கம் போல் இரவு பணிக்காக மருத்துவமனை சென்றுள்ளார். பின்னர், இன்று காலை பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற போது, சுதாமல்லிகா துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

பின்னர், சதிஷ்குமார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.