Asianet News TamilAsianet News Tamil

பிப்ரவரி 5 ஆம் தேதி மறந்துடாதீங்க..! இல்லையென்றால் "டூ வீலர்" வாங்க முடியாது..!

february 5th is the last date to submit the application for two wheeler
february 5th is the last date to submit the application for two wheeler
Author
First Published Jan 24, 2018, 4:52 PM IST


தமிழக அரசின் இருசக்கர வாகன திட்டம் !!

தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள பெண்கள் குறித்து அரசு சார்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

பயனாளிகளின் தகுதி மற்றும் கடன் வசதி :

கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இருசக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000- அல்லது 50 % வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்.

மனுக்கள் பெறும் தேதி மற்றும் இடம் :

ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 05 வரை மனுக்கள் வழங்கப்படும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5, 2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும்.

வயது மற்றும் வருமான வரம்பு :

தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

, மலைப்பகுதி, மகளிரைக் குடும்பத் தலைவராக கொண்ட பெண், ஆதரவற்ற மகளிர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி பெண், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மகளிர் மற்றும் திருநங்கையினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

நீண்ட நாள் ருசி மாறாமல் இருக்கும் திருநெல்வேலி நெய் அல்வா இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் கிடைக்கிறது. ஒருமுறை வாங்கி ருசித்துப் பார்த்தால் அசந்து போகும் அளவுக்கு அதீத சுவை.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் :

அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளராக பதிவு செய்தவர்கள், சுயதொழில் புரிவோர், சொந்தமாக சிறுவணிகம் செய்வோர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :

பிறப்பு சான்றிதழ் மற்றும் இருப்பிடச்சான்றிதழ்.

ஆதார் அடையாள அட்டை.

கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம்.

சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்).

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.

வாகன ஓட்டுநர் உரிமம் நகல்.

வேலை வழங்கும் அலுவலரால் நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ்.

நிறுவனத்தலைவர் சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச்சான்றிதழ்.

எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி சான்றிதழ்கள்.

இவை அனைத்தும் விண்ணப்பத்துடன் இணைக்க பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios