Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: அண்ணாமலை பதிலடி!

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்

Fear of failure bjp state president annamalai answer to CM MK stalin
Author
First Published Jul 9, 2023, 3:48 PM IST | Last Updated Jul 9, 2023, 3:57 PM IST

திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு - தொமுச பேரவையின் முன்னாள் துணை தலைவர் வி.எம்.ஆர்.சபாபதி இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

2014ஆம் ஆண்டு தேர்தலின்போது, கருப்பு பணத்தை மீட்போம், வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துவோம், ஆண்டுக்கு 2 லட்சம் வேலை வாய்பை உருவாக்குவோம் என பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தார்கள். ஒன்றையாவது நிறைவேற்றினார்களா என கேள்வி எழுப்பியதுடன், 15 ரூபாய் கூட மக்களுக்கு பாஜகவினர் கொடுக்கவில்லை என விமர்சித்தார்.

மேலும், பாஜக அரசை அப்புறப்படுத்தும் முயற்சியில், எந்த சூழ்நிலை வந்தாலும், ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார். 

 

 

அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. 

பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், அதைப்பற்றி இம்மியளவும் கவலையில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? தங்கள் மருமகன்தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை? முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் திமுக அரசு?

கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios