farmers saree protest in delhi

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய முறையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகிறது .

விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைதல், ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகம் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்

எலிக்கறி சாப்பிடுதல்,உடம்பில் எழுதி கொள்ளுதல், நிர்வாணமாக ஓடுதல் போன்ற போரட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் நேற்று குட்டிக்கரணம் அடித்து போராடினர்.

அந்த வகையில் இன்று புடவை கட்டி நடு ரோட்டில் அமர்ந்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மத்திய அரசு தங்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்கும் வரை, விவசாய பெருமக்களின் போராட்டம் தொடரும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாணவ அமைப்புகள், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆங்காங்கு போராடி வருகின்றனர் . மேலும் இயக்குனர் கௌதமனும் நேற்று சென்னை கத்திபாரா மேம்பாலத்திற்கு சங்கிலி பூட்டு போட்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக போரட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.