தமிழக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில்,  கடந்த ஒரு மாத காலமாக  தொடர் போராட்டத்தில்   ஈடுபட்டு   வருகின்றனர்.

தேசிய  வங்கிகளில்  உள்ள  பயிர் கடன் தள்ளுபடி,  விவசாய கடன்   தள்ளுபடி , காவிரி  மேலாண்மை வாரியம்  அமைக்க  வேண்டும், ஹைட்ரோ  கார்வான்  திட்டத்திற்கு தடை விதிக்க  வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  விவசாயிகள்   தொடர்ன் போராட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர் .

ஆனால்  மத்திய அரசு  இதுவரை விவசாயிகளின் போரட்டத்திற்கு  செவி  சாய்க்க வில்லை. இந்நிலையில், விவசாய  கடன்  தள்ளுபடி குறித்த எந்த   எண்ணமும் மத்திய அரசுக்கு   இல்லை என   கடந்து 4  நாட்களுக்கு  முன்பு  மத்திய அரசு  தெரிவித்து இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது .

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,ப பண மோசடி  செய்து வெளி நாட்டில்  வசித்து வரும் பிரபல  தொழிலதிபர்  விஜய் மல்லையா எஸ்பிஐ உள்ளிட்ட  இதர  வங்கிகளில் வாங்கிய  கடனுக்கு  அசலும்  கட்டவில்லை, வட்டியும் கட்டவில்லை. ஆனால் இவருடைய கடனை  தள்ளுபடி  செய்தது  தேசிய  வங்கிகள். அதற்கு  பதிலாக  மல்லையாவிற்கு  சொந்தமான  சொகுசு பங்களா  உள்ளிட்ட  பலவற்றை   கைப்பற்றப்பட்டது.

ஒரு சிறிய  கணக்கு  போட்டு பார்த்தால்,  விஜய்  மல்லையா  வாங்கிய  கடனுக்கான  வட்டியுடன் , ஒட்டு மொத்த  தமிழக விவசாய பெருமக்கள் வாங்கிய கடன்கள் குறைவாக தான் இருக்கும்.

இதிலிருந்து  கடன் தள்ளுபடி கிடைத்தவரின்  உல்லாச  வாழ்க்கைக்கும்,  கிடைக்காதவர்களின்  போராட்டமும் வெளிப்படையாக தெரிகிறது.