விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு - அரசின் நலத்திட்டங்களை பெற இதை உடனே செய்யுங்க!
விவசாயிகள் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்டங்களை பெற இதை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பல்வேறு துறை சார்ந்த தேவைகளை ஒரே இடத்தில் பெற வசதியாக தங்களது நில விவரங்களை வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ. ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் அடுக்ககம் என்ற திட்டம் ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்டங்களை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக விவசாயிகளின் அடிப்படை புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணியில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
அரியலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி அவர்களிடம் தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், புகைப்படம் மற்றும் நிலவுடைமை விவரங்களை “AGRISTACK/GRAINS” என்ற செயலியில் பதிவேற்றம் செய்வதன் மூலம் இனிவரும் காலங்களில் விவசாயிகள் தங்களது அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பெற்று பயனடையலாம் என்று அறிவித்துள்ளார். விவசாயிகள் இதனை மறக்காமல் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!