farmers following different type of protest

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , டெல்லி ஜந்தர் மாந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 27 ஆவது நாளாக போராடி வருகின்றனர் . 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான முறையில், போராடி வந்த விவசாயிகள் இன்று பாடைக்கட்டி வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர் . 

அதாவது தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி , காவிரி மேலாண்மை வாரியம் , வறட்சி நிவாரண உதவி வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். 

1௦௦ கும் மேற்பட்ட விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டத்தில்,கடந்த 26 நாட்களாக பல விதங்களில் போராட்டம் நடத்திய விவசாயிகள், இன்று பாடைகட்டி போராட்டம் நடத்தினர்