பருவ மழை பொய்த்து போனதால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்ட விவசாயிகளும் பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

வரலாறு காணாத வறட்சியால் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு உள்ளிட்ட குறுகிய கால பயிர்களும் வாழை, தென்னை போன்ற தோட்ட பயிர்களும் காய்ந்து கருகி கொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே வருமானமின்றி தவித்து வந்த விவசாயிகள், கையில் சேர்த்து வைத்திருந்த நகை, மற்றும் பணத்தை கொண்டு விவசாயம் மேற்கொண்டனர்.

வெள்ளாமை அதிகமாக வந்தவுடன் எப்படியாவது வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்று பயிர் செய்தனர்.

பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகளின் எண்ணத்தில் மட்டுமலல் வ்பால்கயிலும் மண் விழுந்துள்ளது.

ஏற்கெனவே டெல்டா உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் பொய்த்து போனதால் மனமுடைந்து அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றும் மேலும் 7 விவசாயிகள் மரணம்,அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் அரசமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகேசன், ஆயடிமங்கலத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம், விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே உள்ள கே. பாரைப்பட்டியை சேர்ந்த அப்பையா,விழுப்புரம் மாவட்டம் அதலூரை சேர்ந்த மகாலிங்கம் உள்ளிட்ட 7 விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

வறட்சி காரணமாக விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் நெற்களஞ்சியமான டெல்டா மற்றும் பல மாவட்டங்கள் மரண காடாக மாறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.