தேனி

தேனியில் ஆட்சியரகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு விவசாயிகள் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை வகித்தார். 

இந்தக்ஜ் கூட்டத்திற்கு 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்திருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்தார். 

அப்போது விவசாயிகள், "தேனி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு வனத்துறை சார்பில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். 

மேய்ச்சல் சீட்டு கடந்த 11 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனைக் கண்டிக்கும் வகையில் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்துள்ளோம்" என்று தெரிவித்தனர். 

அதர்கு பதிலளிக்கும் விதமாக மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதி, "இன்று (அதாவது நேற்று) காலையில் தான் மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்குவதற்கு கையெழுத்து போட்டுள்ளேன். 

அந்தந்தப் பகுதிகளுக்கான வனச்சரகரிடம் நடப்பு ஆண்டுக்கான மேய்ச்சல் அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். 

மேகமலை வன உயிரின காப்பக பகுதியில் 2250 மாடுகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்க கையெழுத்து போடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினருகு, விவசாயிகள் நன்றித் தெரிவித்தனர்.