Farmers Association urging to hire Permanent Agriculture Assistant Director

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நிரந்தர வேளாண் உதவி இயக்குநரை பணியமர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தமிழக விவசாயிகள் சங்க வட்டாரச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், நகரச் செயலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், "சவ்வாதுமலை ஒன்றியத்துக்கு நிரந்தர வேளாண் உதவி இயக்குநரை பணியமர்த்த வேண்டும்.

ஜமுனாமரத்தூரில் சிறுதானிய உற்பத்திக்கு மதிப்புக்கூட்டும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். 

பருவமழை தொடங்கும் முன்பாக செண்பகத்தோப்பு அணையில் ஷட்டரை பழுது பார்க்க வேண்டும். 

போளூர் வட்டத்தில் உள்ள ஏரி, நீர்ப்பிடிப்பு புதிகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், ஐயாயிரம், பழனி, சின்னகுட்டி மற்றும் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.