Farmers are poor in the meeting of farmers The crowd is dirty

நாகப்பட்டினம்

வழக்கமாக மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நேற்று புதன்கிழமை நடந்ததது. இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் அதிகளவிலும், விவசாயிகள் குறைவாகவும் இருந்ததால் விவசாயிகள் கூட்டம் விவசாயிகள் இல்லாமல் வெற்றிச்சோடியது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் சேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசியது:

“வெண்ணாறு வடிநிலப் பகுதியில் பொதுப்பணிதுறை மூலம் புதிய கட்டுமான பணிகள் பழுதுபார்த்தல் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தலைஞாயிறு பகுதி மக்களின் கோரிக்கையாக அரிச்சந்திரா மற்றும் அடப்பாறு பகுதியில் அணைக் கட்டினால் மட்டுமே இந்த திட்டம் முழு பயன்பெறும்.

புதுப்பள்ளி பாலத்திற்கு மேற்கே தடுப்பணை ஒன்று கட்டி உப்பு நீரைத்தடுத்து நல்ல தண்ணீர் ஆதாரத்தை காக்க வழி செய்யவேண்டும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி காணப்படுகிறது. இந்த நிலையில் மீன் எண்ணெய், குடிநீர் உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகள் இயங்குவதை தடுக்க வேண்டும்.

அனைத்து விவசாயிகளுக்கும் உடனே நிவாரணம் வழங்கவேண்டும்.

விவசாயிகள் நலன் கருதி பட்டுக்கோட்டையில் உள்ள மத்திய தென்னை வாரியத்தை நாகைக்கு கொண்டுவர வேண்டும். இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைவார்கள்.

பனங்குடி ஆற்றை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” போன்ற குறைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கமாக மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், நாகை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் என்பன உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர், விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர்.

ஆனால், நேற்று புதன்கிழமை நடந்த இந்தக் கூட்டத்திற்கு குறைவான விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு விவசாயிகளை விட அரசுத்துறை அதிகாரிகள் அதிகளவிலும், விவசாயிகள் குறைவாகவும் இருந்ததால் குறைதீர்க்கும் கூட்டம் வெறிச்சோடியது.