Farmers are happy with a light rainfall in Ariyalur ...
அரியலூர்
அரியலூரில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பெய்து வரும் இலேசனான மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது,
இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வவைத்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
திங்கள்கிழமை காலை முதல் அரியலூர், செயங்கொண்டம், திருமானூர், செந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
மேலும், மானாவாரி பயிர்களுக்கும், சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், முத்துச்சோளம், மிளகாய்ச் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் இந்த மழை உபயோகமாக அமையும் என்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
