கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்திய மூவரில் ஒருவர் உயிரிழப்பு. இரண்டுபேர் மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருநேல்வேலி நகரம், அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோயில் தெருவைச் சேர்ந்த அழகியநம்பி மகன் நல்லக்கண்ணு (48). இவர் மோட்டார் சைக்கிள் பழுக்கும் கடை வந்தார்.
இவரது மனைவி சொர்ணலதா (43). இவர்களுக்கு மகள் திவ்யலட்சுமி உள்ளார். திவ்யலட்சுமி கல்லூரியில் பயின்று வருகிறார். தொழிலில் போதிய வருமானம் இல்லாத நிலையில், நல்லக்கண்ணு, பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வந்தாராம்.
இந்த நிலையில் நல்லக்கண்ணு, குடும்பத்துடன் தற்கொலை முடிவு செய்து, உணவில் விஷம் கலந்து சாப்பிட்டுள்ளார். அவர் மட்டுமல்லாது மனைவி மற்றும் பெண்ணுக்கும் அநத உணவு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நல்லக்கண்ணு, நேற்று காலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து திருநெல்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட சடலங்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
