பிரபல ரேடியோ ஜாக்கி அடித்து கொலை....ரத்த வெள்ளத்தில் மிதந்த சோகம்..!

கேரளாவை சேர்ந்த பிரபல ரேடியோ ஜாக்கியான ரசிகன்   ராஜேஷ் என்பவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்

36 வயதான ரசிகன் ராஜேஷ் கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தை சேர்ந்தவர்.

இவரை அறியாத கேரள நபர்கள் யாரும் இருக்க  முடியாது.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே  உள்ளனர்

இந்நிலையில்,ராஜேஷ் மாத ஊரில் ரெக்கார்டிங்கை முடித்து  விட்டு தனது நண்பர் குட்டனுடன் வீடு திரும்பும் போது, திடீரென மர்ம நபர்களால் சரமாரியாக அடித்து கொலை  செய்யப்பட்டு உள்ளார்

இவர்கள் இருவரையும், பயங்கரமான ஆயுதங்களால்  தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் மிதந்து உள்ளார் ராஜேஷ்

பின்னர் இவர்கள் இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர்  அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் ராஜேஷ் உயிர் இழந்தார்.மற்றும் அவரது நண்பர் குட்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என  கூறப்பட்டு உள்ளது

ரசிகன் ராஜேஷ் பல மேடை நிகழ்சிகளில் பாடல்களை  பாடியும், நகைச்சுவையாக பேசியும் அனைவரையும் மகிழ்விப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் யாரை போன்றாவது மிமிக்கிரி செய்தாரா..? அல்லது  ஏதாவது முன்விரோதம் காரணமாக யாராவது அவரை  கொலை செய்ய  ஏவப்பட்டனரா என பல கோணங்களில்  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.