fake liquor killed 4 in dharmapuri

தருமபுரியில், மதுபானத்தில் போதை பவுடர் கலந்து குடித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தருமபுரி மாவட்டம், பென்னாகரம், எரியூரைச் சேர்ந்தவர்கள் பச்சையப்பன். இவர் தனது நண்பர்களான விஜய், பழனிச்சாமி, உத்திரகுமார் உள்ளிட்ட 4 பேருடன் நேற்று மது அருந்தி உள்ளனர். 

போதைக்காக, தாங்கள் வைத்திருந்த போதை பவுடரை மதுவுடன் கலந்து குடித்துள்ளனர்.மதுவுடன் போதை பவுடர் கலந்து குடித்த அவர்கள், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். 

இதைனையடுத்து, அருகில் இருந்தோர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தனர். 

அப்போது பச்சையப்பன், விஜய், பழனிச்சாமி உயிரிழந்ததாக கூறினர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உத்திரகுமார் உட்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

இது குறித்து தருமபுரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்காக தங்களின் உயிரை விட்ட அவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.