சென்னை வடபழனி ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு விடுதியில், திருமுல்லைவாயிலை சேர்ந்த தினேஷ் பாபு அரை எடுத்து தங்கி உள்ளார்.இவர் தூத்துக்குடியை சேர்ந்த மந்திரமூர்த்தி என்பருடன் முகநூல் உரையாடல் நடத்தி உள்ளார்.

மேலும் சென்னைக்கு வந்து தன்னுடன் சேர்ந்து தங்க அழைப்பு விடுத்துள்ளார் தினேஷ் பாபு.திருமுல்லைவாயிலை சேர்ந்த தினேஷ் பாபு, தூத்துக்குடியை சேர்ந்த  மந்திர மூர்த்தியுடன் முகநூல் மூலம் நட்பாக பழகி உள்ளார்.

தினேஷ் பாபுவின் உரைடையாடல் மூலம், அவர் ஓரின சேர்க்கைக்கு அதிக ஆர்வமாக இருப்பதை உணர்ந்துள்ளார் மந்திரமூர்த்தி.

பின்பு, இந்த விவரத்தை தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்த மந்திர மூர்த்தி, அவருடன் மாரியப்பன், இளைய ராஜா முத்துராமலிங்கம் என நண்பர்களுடன் சேர்ந்து சென்னை  வந்துள்ளார்

பின்னர், தினேஷ் பாபுவை சந்திக்க முதலில் அவர் அறைக்கு சென்ற மந்திரமூர்த்தி சிறிது நேரம் அவருடன் ஜாலியாக பேசி விட்டு,பின்னர் மற்ற நண்பர்களை  அழைத்துள்ளார்.

நான்கு பேரும் ஒன்றாக, சேர்ந்துகொண்டு, தினேஷ் பாபுவை மிரட்டி நிர்வாணமாக  வீடியோ எடுத்து உள்ளனர். பின்னர் இந்த வீடியோவை காட்டி, மிரட்டி ரூ.40 ஆயிரம்  பணம் பெற்று உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், தினேஷ் பாபு அடித்து உதைத்து மிரட்டி உள்ளனர். அப்போது அவருடைய கதறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐந்து பரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் .

அதில், மந்திர மூர்த்தி தன்னை ஒரு பெண் போல நம்ப வைத்து உரையாடல் நிகழ்த்தியதும், இதுவரை இது போன்று 15 பேரிடம், தனது  நண்பர்களுடன் சேர்ந்து, அவர்களிடம் நகை பணம் அனைத்தும் மிரட்டி வாங்கியதும் தெரிய வந்து உள்ளது  

இது குறித்து விடுதி நிர்வாகத்திடம் விசாரணை நடத்திய போது, சிசிடிவி கேமரா கூட  வைக்காதது தெரிய வந்து உள்ளது.மேலும் முறையான அனுமதி கூட பெறாமல் இந்த  விடுதி நடத்தி வருவதாகவும், அதற்காக போலிசாருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும்  குறிப்பிட்டு உள்ளார்.

முக நூல் நட்பு எப்படி வேண்டுமானாலும் நம் வாழ்கையில் பெரும் பாதகத்தை  ஏற்படுத்தும் என்பதற்கு இதுதான் சான்று.