Asianet News Tamil

2000 கிலோ கறி... ஒரு நாய் தோலுரிக்கபட்டால் 7 கிலோ தான்! அப்படின்னா? முகநூலில் உலாவரும் ஒரு கணக்கு...

 இந்தியாவின் வடகிழக்கு மற்றும் காஷ்மீரில் உள்ள குளிர்பிரதேஷ ஆடுகளுக்கு வால் நீளமாக இருக்குமாம் இது அங்கிருந்து வந்திருக்கலாம் வால் நீளத்தை மட்டும் வைத்து நாய் என கூறிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது,

Facebook Status about dog meat
Author
Chennai, First Published Nov 19, 2018, 2:07 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்துசென்னை எழும்பூர் வரும் ரயிலில் பதப்படுத்தப்படாத இறைச்சி கொண்டுவரப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் – சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நேற்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது 24 பார்சல் பெட்டிகளில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. முறையாக  பதப்படுத்தப்படாமல் எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் அந்த இறைச்சி கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த இறைச்சி எந்த விலங்குடையது என்று ஆய்வு செய்வதாக கூறி அதிகாரிகள் சில சோதனைகளை செய்தனர். உடனடியாக ஜோத்பூர் ரயிலில் வந்திருப்பது நாய்கறி என்றும், சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர உணவகங்களுக்கு விற்க கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவலை கசியவிட்டனர். இதனால் சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பேசும் பொருளானது.

நாய்கறி சதி பிரியாணி சந்தை முஸ்லிம்களிடம்தான் இருந்து வருகிறது மேலும் கறிவியாபாரமும் முஸ்லிம்களிடமே பெருவாரியாக இருக்கின்றது இதை சிதைக்கவும் மக்களை வெறுக்கவைக்கவும் இதன் மூலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீர்குழைக்கவும் செய்யபடும் சதியோ என இந்த நாய்கறி சமாச்சாரம் பார்க்கபடுகிறது.

காரணம் ஒரு நாய் தோலுரிக்கபட்டால் 7 கிலோவுக்கு மேலிருக்காது கைபற்றபட்டதோ 2000 கிலோ என கூறபடுகிறது அப்படி என்றால் எத்தனை நாயை கொண்றிருக்க வேண்டும் என கணக்கிட்டால் 300 நாய்களுக்கு மேல் வருகிறது ஒரே நேரத்தில் எந்த மாநிலத்திலும் இவ்வளவு நாய்கள் குறைந்தால் தெளிவாக தெரியவரும் கறிக்காக நாயை பண்ணைவைத்து வளர்ப்பதுமில்லை தெருநாய்களாக இருந்தால் இவ்வளவு நாய்கள் காணமல் போனாலும் மக்கள் சந்தேகபடுவார்கள்,

மேலும் இந்தியாவின் வடகிழக்கு மற்றும் காஷ்மீரில் உள்ள குளிர்பிரதேஷ ஆடுகளுக்கு வால் நீளமாக இருக்குமாம் இது அங்கிருந்து வந்திருக்கலாம் வால் நீளத்தை மட்டும் வைத்து நாய் என கூறிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

ஆகவே இவைகள் உணவுக்காக கடத்தபட்ட நாய்கறி அல்ல இது வேறு.ஏதோ ஒருகாரணம் இருக்கலாம் இந்த வழக்கை சரியான கோணத்தில் விசாரித்தால் தெரியவரும் அதற்க்கு முன்பே காவி சிந்தனைவாதிகள் முஸ்லிம்களின் ஓட்டல்களில் சாப்பிடாதீர்கள் அம்புட்டும் நாய்கறி என முகநூலில் தீவிர பிரச்சாரம் செய்கின்றனர்.

கறிவந்ததே ,கணேசன் எனும் இந்து நபருக்குத்தான் இந்த லக்கேஜ் புக்கிங் ரசீதை ரயில்வே போலீசார் தீவிரமாகஆய்வு செய்தால் உண்மைகள் புலனாகும் இதை மத்திய பாஜ அரசு தீவிரம் காட்டி கண்டுபிடிக்குமா என்பதும் சந்தேகமே? இவர்களது நோக்கமெல்லாம் முஸ்லிம்களை ஏதாவது ஒரு வழியில் பாதிப்படைய செய்யவேண்டும் என்பதே?

கடுகளவு ஈமான் (இறைநம்பிக்கை)கொண்ட ஒருமுஸ்லிமும் நாய்கறியை விற்க்கும் இழி நிலைக்கு செல்லமாட்டான் அப்படி விற்ப்பது உண்மை என தெரியவந்தால் அவனை தூக்கிலிட வேண்டும் அந்தளவுக்கு கொடூரமான குற்றம் இது அதே நேரம் இதில்மதத்தை பார்க்காமல் நேர்மையாக விசாரனை நடத்தபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios