சென்னை பண்டி பஜாரில் தனியார் நிறுவன் பெண் ஊழியர் காதல் தோல்வியால் 4 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை , போரூர் மணப்பாக்கத்தை சேர்ந்தவர் சர்மிளா (எ) அஞ்சலி (22) இவர் தி.நகர் பாண்டி பசாரிலுள்ள வி.கேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த விக்னேஷ் (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் அவர்கள் நட்பு சாட் மூலம் வலுவடைந்து , வலுவடைந்து காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தீவிரமான காதலாக மாறியுள்ளது. நீ இல்லாவிட்டால் நானில்லை என்ற நிலையில் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
விக்னேஷ் பிஎஸ்சி படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் சர்மிளாவின் போனுக்கு விக்னேஷ் நம்பரிலிருந்து போன் வந்துள்ளது. போனை எடுத்து பேசிய சர்மிளாவுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

தனது காதலன் விக்னேஷ் போனிலிருந்து ஒரு பெண்குரல் நீங்கள் தான் சர்மிளாவா என்று கேட்டுள்ளது. இதை கேட்டு ஆமாம் என்ற சர்மிளா நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் நான் தான் அபி உங்கள் விக்னேஷின் காதலி என்னைத்தான் அவர் விரும்புகிறார் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சர்மிளா என்ன சொல்கிறீர்கள் என்று அதிர்ச்சியடைந்த சர்மிளா போனை காதலன் விக்னேஷிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார். போனை வாங்கிய விக்னேஷ் நானும் அபியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா விக்னேஷிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சேலத்துக்கே புறப்பு சென்றுவிட்டார். அப்போது அவரை திரும்பபவும் கோயம்பேட்டில் கொண்டு வந்து விட்ட விக்னேஷ் தான் நிச்சயம் சர்மிளவை திருமணம் செய்வதாக் கூறியுள்ளார்.
பின்னர் சர்மிளாவின் தாயார் விக்னேஷிடம் பேசிய போதும் தான் மூன்று வருடத்தில் அரசு வேலைக்கு செல்ல உள்ளதாகவும் அப்படி சென்ற பின்னர் திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அபியுடன் மீண்டும் தொடர்பில் இருப்பதை கண்டு சர்மிளா சண்டை போட்டுள்ளார்.
ஒரு நாள் கான்ஃபரன்ஸ் கால் போட்டு தான் அபியை சர்மிளாவுடன் பேச வைத்துள்ளார் விக்னேஷ். அப்போது தான் விக்னேஷை விட்டு விலகிவிட்டதாகவும் இனி உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன் என்று அபி கூறியுள்ளார் .
ஆனால் அதன் பிறகும் அபியுடன் தொடர்பை விக்னேஷ் முறித்து கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று வி.கேர் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சர்மிளா காதலன் விக்னேஷுக்கு போன் செய்துள்ளார். அவர் போன் எங்கேஜ்டாக இருந்துள்ளது.
பின்னர் அபி நம்பருக்கு போன் செய்யும் போடு அதுவும் எங்கேஜ்டாக இருந்துள்ளது. இதனால் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளான சர்மிளா நேராக தனது அலுவலகத்தின் 4 மாடிக்கு சென்று செல்போனை உடைத்துவிட்டு 4 வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
4 வது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் மரக்கிளையில் உடல் மோதி தரையில் வந்து விழுந்துள்ளார். தலையில் பலத்த அடி கைகால் எலும்பு முறிவு , இடுப்பு எலும்பு முறிவுடன் உயிருக்கு போராடிய சர்மிளா சம்பபவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் அடித்து பிடித்து ஓடினர். புகாரின் பேரில் சம்ப்பவ இடத்திற்கு வந்த பாண்டி பசார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
