பட்டதாரி இளம்பெண், பேஸ்புக் நட்பால், பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, பேஸ்புக் காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே உள்ள ஒரு லாட்ஜில் உள்ள அறை, நீண்ட நேரமாக மூடியே கிடந்தது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பலமுறை கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அரை நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையில், மயிலாப்பூர் வி.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். அதே பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வருகிறார். இவரது இளைய மகள் நிவேதிதா (22), எம்பிஏ முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

கடந்த 14ம் தேதி காலை நிவேதிதா, தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், நிவேதிதாவின் தோழிகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, மயிலாப்பூர் போலீசில், எத்திராஜ் கடந்த 14ம் தேதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதைதொடர்ந்து போலீசார், நிவேதிதாவின் தந்தை எத்திராஜை வரவழைத்து, சடலமாக கிடந்த பெண்ணை அடையாளம் காட்டும்படி கூறினர். அதன்பேரில் எத்திராஜ், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, சடலமாக கிடந்த இளம்பெண் நிவேதிதா என தெரிந்ததும், கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்தன. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது.

நிவேதிதா செல்போன் மற்றும் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தபோது, பேஸ்புக்கில் நண்பராக பழகிய ஒருவர், நிவேதிதாவுடன் செல்போனில் அதிக நேரம் பேசியது தெரியவந்தது. நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. சமீபத்தில் பேஸ்புக் காதலன் தனது நண்பருடன் நிவேதிதாவை பார்க்க மயிலாப்பூர் வந்துள்ளார். 

அப்போது, அவர்களை தங்க வைப்பதற்காக நிவேதிதா லாட்ஜில் ரூம் புக் செய்துள்ளார். அதன்படி, கடந்த 14ம் தேதி லாட்ஜில் நிவேதிதா தனது காதலன் மற்றும் அவரது நண்பருடன் லாட்ஜுக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார்.

அறையில், நிவேதிதாவுடன் காதலன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளா. பின்னர், தனது நண்பரையும் உல்லாசமாக இருக்க செய்துள்ளார். இதனால், நிவேதிதாவுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், நிவேதிதாவை சரமாரியாக தாக்கி, கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். இதற்கான காயங்கள் உள்ளன. முதுகு பகுதியில் நகக் கீறல்கள் உள்ளன. 

லாட்ஜ் அறையில் இருந்து முக்கிய தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நிவேதிதாவுடன் வந்த காதலன், அவரது நண்பர் பற்றி, லாட்ஜி உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டுவிட்டோம். இருவரையும் விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் கூறினர்.