சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பேஸ்புக் வழியே நண்பர்களாக இருப்பவர்கள், திடீரென பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை இழைப்பது நடந்து வருகிறது. இதுபோன்று பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. 

ஆனால், தற்போது பேஸ்புக் வழியே பழகிய ஆண் நண்பர் ஒருவர், பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 

சென்னை, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான இவருக்கு பேஸ்புக் மூலம் பழனியைச் சேர்ந்த மனோஜ் குமார் (22) என்பவர் நண்பராகி உள்ளார்.

இந்த நிலையில், மனோஜ்குமாரை, தேவி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்துள்ளார். தேவியின் வீட்டுக்கு வந்த மனோஜ், யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேவியின் நகையைப் பறித்து சென்றுள்ளான்.

ஆனால், நகை பறிபோனது குறித்து தேவியோ, வேறு விதமாக போலீசில் கூறியுள்ளார். முன்னுக்குப்பின் முரணாக பேசிய தேவியை, விசாரித்த போலீசார், உண்மையை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பழனியைச் சேர்ந்த மனோஜ் என்பவர்தான் தங்க நகையை பறித்து சென்றார் என்றும், பேஸ்புக் மூலம் அறிமுகமானவர் என்றும் கூறியுள்ளார்.

இதை அடுத்து, செங்குன்றம் போலீசார், பழனி சென்றனர். அங்கு மனோஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துனர். மனோஜ் மீதுள்ள வழக்குகள் குறித்தும் செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.