தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 45 நாட்களில் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களின் இனவிருத்தியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கடல்பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் 45 நாட்கள் மீன்கள் பிடிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு, கிழக்கு கடல் பகுதியில் ஏப் 15 ஆம் தேதியில் இருந்து மே மாதம் 29 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு கடலில் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 45 நாட்களில் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 45 நாட்களில் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் 61நாள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

மீனவர்களுக்கான தாய் கப்பல் திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்படும்.

நடுகுப்பத்தில் 32 லட்ச ரூபாய் மதிப்பில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.