Asianet News TamilAsianet News Tamil

செலவினங்கள் உயர்வாக உள்ள நகரம் சென்னை... ஆய்வில் அதிர்ச்சி!

Expenditure is high in Chennai - Information in the study
Expenditure is high in Chennai - Information in the study
Author
First Published Jun 27, 2018, 3:10 PM IST


இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவருக்கு பெங்களூரு போன்ற நகரங்களை விட சென்னையில் செலவினங்கள் உயர்வாக இருப்பதாக மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம், 5 கண்டங்களைச் சேர்ந்த 209 நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு 144-வது இடம் கிடைத்துள்ளது.

Expenditure is high in Chennai - Information in the study

வீட்டுக்கான செலவு, போக்குவரத்து செலவு, உணவுக்கான செலவு, ஆடைகளுக்கான செலவு, பொழுதுபோக்கு உள்பட 200-க்கும் மேற்பட்ட காரணிகள் உட்படுத்தப்பட்டன. 

இது குறித்து மெர்சர் நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவரான பத்மா ராமநாதன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சென்னை ஒன்பது இடங்கள் சரிந்துள்ளது என்றாலும். 5.57 சதவிகித பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் மது மற்றும் ஆடைகளின் விலை உயர்வாகவே உள்ளது என்றார்.

Expenditure is high in Chennai - Information in the study

பெங்களூருவில் போக்குவரத்து செலவுகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். டாக்சி கட்டணம், வாகனங்கள், வாகன உதிரி பாகங்களுக்கான செலவுகள் பெங்களூருவில் சரிந்துள்ளது. 

வெளி நாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு மிக குறைவான செலவுகளை ஏற்படுத்தும் நகரமாக கொல்கத்தா 182-வது இடத்தில் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Expenditure is high in Chennai - Information in the study

உலகிலேயே செலவு மிகுந்த நகரமாக ஹாங்காங் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டோக்கியோ, ஜூரிச், சிங்கப்பூர், சியோல், ஷாங்காய், பீஜிங், பெர்ன் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. 

இந்தியாவில், செலவுகள் மிகுந்த நகரமாக மும்பை 55-வது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி 103-வது இடத்திலும், பெங்களூரு 170-வது இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios