exam result delay in thanchai and kovai

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதையொட்டி மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரசிங் சென்டர்களில் படையெடுத்து கொண்டுள்ளனர்.

தேர்ச்சி பெற்றதை அறிந்ததும், அவர்களது மதிப்பெண்களையும் அலசி, ஆராய்ந்து எடுத்து தங்களது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரிவித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்தாண்டும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதமும் 94.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆனால், தஞ்சை மற்றும் கோவையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி, அலுவலகத்துக்கு வரவில்லை. இதனால், தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.