Erode girl murder case

ஈரோட்டில், சிறுமி மர்மமான முறையில் இறந்துபோன சம்பவத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவனின் கள்ளக்காதலால், பக்கத்து வீட்டு சிறுமியை கொன்றதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுக்கா, கருமாண்டிசெல்லிப்பாளையம், அங்கப்பா வீதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு வினோ (9), கனிஷ்கா (7) என இரண்டு பெண் குழந்தைகள். சண்முகநாதன் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும், திங்களூரில உள்ள தனியார் நிறுவனத்தில் கனகாவும் வேலை பார்த்து வந்தனர். வழக்கம்போல் இவர்கள் நேற்று முன்தினம், காலை வேலைக்கு சென்றனர்.

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் இருவரும் பக்த்து வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடி வந்திதுள்னர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் கருமாண்டிச்செல்லிபாளையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தடியில் சிறுமி கனிஷ்கா மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறாள். மயங்கிய நிலையில் இருந்த சிறுமியைப் பார்த்த முறுக்கு வியபாரி ஒருவர் இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதைனையடுத்து, சிறுமி கனிஷ்காவை பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிறுமியைப் பரிசோதித்த
மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுமி இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்ற பெண் சிறுமியைதூக்கிச் சென்றதாக போலீசாரிடம் கூறியுள்ளா. இது குறித்து வனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினால் இதில் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் கூறும்போது, குன்னூர், தூளூர்மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (33). இவர், 2009 இல் வேறு சமூகத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (35) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு, எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். ஏழு வருடங்களுக்கு முன், கருமாண்டிச்செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகநாதன், கனகா தம்பதி உடன் நட்பாகப் பழகி உள்ளனர்.

கனகாவின் கணவர் சண்முகநாதன் குடிபோதைக்கு அடிமையாகி, குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். அப்போது, வனிதாவின் கணவர் கமலக்கண்ணனுக்கும், கனகாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் மகள் கனிஷ்காவை, தன் மகள் போல் பாவித்து, கமலக்கண்ணன் செலவு செய்து வந்துள்ளார். இதனால், கமலக்கண்ணனுக்கும், அவர் மனைவி வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சிறுமி உயிருடன் இருந்தால் தனக்கும், தன் மகனுக்கும் பிரச்சனை ஏற்படும் எனக் கருதிய வனிதா, சிறுமியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். வீட்டின் அருகில்
விளையாடிக் கெண்டிருந்த சிறுமி கனிஷ்காவுக்கு திண்பண்டங்கள் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொலை
செய்துள்ளார்.

இதன் பின்னர், கனிஷ்காவை உடலை தோளில் தூக்கிச் சென்று அருகே மரத்தடியில் போட்டு வந்துள்ளார். கனிஷ்காவின் பிரேத பரிசோதனை அறிக்கையின்
முடிவிலும், நேரில் பார்த்த சாட்சி, வனிதாவின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையிலும் வனிதாவை கைது செய்துள்ளோம் என்று கூறினார். தற்போது
பெருந்துறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் வனிதா ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.