Asianet News TamilAsianet News Tamil

கூட்டணி கட்சி என்று பார்க்காமல் கும்ப கர்ணன் தூக்கத்தில் இருந்து விழியுங்கள்.! முற்றுப்புள்ளி வையுங்க- இபிஎஸ்

உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக இடிக்க, மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ம்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுத்து கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

EPS request to take steps to strengthen baby dam in Mullaiperiyar dam KAK
Author
First Published May 24, 2024, 10:33 AM IST | Last Updated May 24, 2024, 10:33 AM IST

முல்லைப்பெரியார் அணை

முல்லைப்பெரியார் அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளா அரசின் நடவடிக்கை தடுத்து நிறுத்த கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  சட்டப் போராட்டம் நடத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அணையில் முழுமையான ஆய்வுகள் மேற்கொண்டபின், முதலில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று (அம்மாவின் ஆட்சி) தீர்ப்பளித்தது. மேலும், அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பிலே குறிப்பிட்டிருந்தது. 

சிலந்தி ஆற்றை தொடர்ந்து முல்லை பெரியாரை டார்கெட் செய்யும் கேரளா.. புதிய அணை கட்டினால் பாதிப்பு என்ன.?

EPS request to take steps to strengthen baby dam in Mullaiperiyar dam KAK

மரங்களை வெட்ட அனுமதி மறுப்பு

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், அம்மாவின் அரசில் பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளை பலப்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021-ல்  திமுக அரசு பொறுப்பேற்றது. 2021 அக்டோபர் மாதம் பருவ மழையின் போது பெய்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சுமார் 138.85 அடியாக இருக்கும்போதே, கேரள அரசின் அமைச்சர்கள் தன்னிச்சையாக அணையின் ஷட்டர்களைத் திறந்து நீரை வெளியேற்றினர்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே இருக்கும் 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை 2021 அக்டோபர் மாதம் அனுமதி வழங்கியதாகவும், அதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக தமிழ் நாடு அரசு பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. மேலும், அதில் அணையை வலுப்படுத்த கட்டுமானப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பெரியாறு அணைக்கு செல்லும் பாதையை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

EPS request to take steps to strengthen baby dam in Mullaiperiyar dam KAK

வேதனையில் விவசாயிகள்

இந்த அறிக்கை வெளிவந்த உடனேயே கேரள முதலமைச்சர் அதிர்ச்சியடைந்ததாகவும், மரம் வெட்ட யாரும் உத்தரவிடவில்லை என்றும், தமிழக அரசுக்கு அனுமதி அளித்து கடிதம் எழுதியிருப்பின், அந்த வனத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன. மேலும், பேபி அணையில் மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதிக் கடிதத்தை ரத்து செய்வதாக கேரள வனத் துறை அமைச்சர் அறிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில், தமிழக அரசின் அனுமதியின்றி கடந்த 29.10.2021 அன்று கேரள அமைச்சர்கள் முன்னிலையில், முல்லைப் பெரியாறு அணையை திறந்துவிட்டது தவறு என்று நான் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக கடும் எதிர்ப்பை தெரிவித்தேன்.  முல்லைப் பெரியாறு பிரச்சனையில் விடியா திமுக அரசின் செயலற்ற தன்மையால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், குடிநீருக்காக நம்பி உள்ள பல மாவட்ட மக்களும் இன்றைக்கு வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

EPS request to take steps to strengthen baby dam in Mullaiperiyar dam KAK

கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழுயுங்கள்

இனியாவது இந்த விடியா திமுக அரசு, கூட்டணிக் கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுத்து கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும்; தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும், முல்லைப் பெரியாறு அணையில், உச்சநீதிமன்ற ஆணையின்படி பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

Mystery : பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் ரகசியம் என்ன? குவிந்து கிடக்கும் தங்கத்தின் மதிப்பு எவ்வளவு.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios